Meme செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
செயலியின் அளவு
Meme செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு பிளாக்கர் ஒரு Adsense மற்றும் ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Tamil Image Editor - Troll என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Big Brothers என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.பிளாக்கர்
நீங்கள் பிளாக்கர் என்று சொல்லக்கூடிய இணையதளத்தை உருவாக்குவதற்கு உங்களுக்கு ஒரு ஈமெயில் ஐடி இருந்தால் மட்டும் போதும். நம்மால் ஒரு இணையதளத்தை இலவசமாகவே உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு இணையதளத்தை உருவாக்கும் போது அந்த இணையதளத்திற்கான பெயரையும் மற்றும் அந்த இணைய தளத்திற்கான URL லயும் அனைவருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு சினிமாவைப் பற்றி போடுகிறீர்கள் எனில் உங்களுடைய இணைய தளத்திற்கான பெயர் சினிமாவை சார்ந்ததாகவும், அதேபோல URL பெயருக்கு ஏற்ற மாறியும் இருப்பது நல்லது. ஏனெனில் மக்கள் நமது இணையதளத்தில் தேடுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். மேலும் இணையதளம் மூலம் பணம் சம்பாதிக்க adsense தேவை. Adsense என்றால் என்ன என்பதை நான் கீழே காணலாம்.Adsense
நீங்கள் ஒரு இணைய தளத்தில் குறைந்தது 20 post போட்டு இருப்பது நல்லது. மேலும் அந்த 20 போஸ்ட் இருக்கும் நல்ல வரவேற்பு இருக்க வேண்டும். அப்படி நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிந்த பின்னர் ஆட்சென்ஸில் அப்ளை செய்வது நல்லது. ஆட்சென்ஸ் என்பது உங்கள் இணையதளத்தில் விளம்பரத்தை கொண்டுவரக்கூடிய ஒரு இணையதளம் ஆகும். நீங்கள் Adsense account open செய்வதும் மிகவும் எளிமையானது. அதாவது Blogger எந்த ஈமெயில் ஐடி வைத்து ஓபன் செய்தீர்களோ அதே email id வைத்து இந்த Adsense ஓபன் செய்வது நல்லது. ஒருமுறை கூகுளிடம் அப்ரூவல் வாங்கிவிட்டீர்கள் எனில் உங்களுடைய இணையதளத்தில் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விடும். பின்பு அந்த விளம்பரங்கள் மூலம் நீங்கள் வருமானம் பார்க்க முடியும்.Meme செய்வதன் மூலம்
தற்பொழுது மீமிற்கு நல்ல வரவேற்பு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. மீம் உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயமே. ஆகையால் நீங்கள் ஒரு மீமை நன்றாக உருவாக்குவதற்கு உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோக்கள் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் 20க்கும் மேற்பட்ட எழுத்துக்களின் டிசைன் உள்ளது. இந்த அப்ளிகேஷனில் நம்முடைய சொந்தமான வரைபடங்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். போட்டோஷாப்பில் வருவதுபோல லேயர் களையும் உருவாக்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு மீம்மை உருவாக்குவதற்கு உங்களுடைய சொந்தமான சிந்தனை இருக்க வேண்டும். அப்படி நீங்கள் நன்றாக சிந்தனை செய்தீர்கள் எனில் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும். இதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பார்க்க முடியும்.இந்த வீடியோவை பாருங்கள் இலவசமாக Website ஓபன் செய்யலாம்
No comments: