தமிழ் நாடு அரசு இந்த டிக் டாக் ஆப் தடை செய்ய முடிவெடுத்துள்ளது
டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் செயலியில் பயனாளர்கள் தங்கள் டப்ஸ்மாஸ் வீடியோ, சினிமா பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நடித்து பதிவேற்றி வருகின்றனர். இந்த செயலில் நல்ல விசயங்களை விட ஆபாசம் சார்ந்த தகவல்கள் மற்றும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்ற நிலையில் டிக் டாக் மீதான எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் கலாச்சாரம் சீரழிய முக்கிய காரணமாக இருக்கிறது, அதாவது பெண்கள் ஆபாச உடை ம்,மற்றும் டபுள் மீனிங் சொல் போன்றவை பயன்படுத்துகிறார்கள், மேலும் இதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கருத்து உரையாடலை படித்துவிட்டு சிலர் மண உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இதில் பெரிதும் பாதிக்கப்படுவது இளைஞர்கள் தான்
டிக் டாக் செயலி ஒரு பொழுது போக்குக்காக மேலும் தங்கள் திறமையை தெரிவிப்பதற்கும், இது இருந்தது நாளடைவில் கலாச்சாரம் சீரழிவு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த செயலியை தடை செய்ய தமிழக அரசு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது பேசிய எம்.எல்.ஏ தமீமுன் அன்சாரி கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ப்ளூ வேல் விளையாட்டை எப்படி மத்திய அரசு மூலம் தடை செய்யப்பட்டதோ, அதேபோல டிக் டாக் செயலிக்கும் தடை செய்யப்படும். அதற்காக தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும் என கூறியுள்ளார்.
No comments: