Youtube போல
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் நம் அனைவர் மனதிலும் உள்ளது. தற்போது பேஸ்புக் நிறுவனம் youtube போல பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.எப்போது வருகிறது
இந்த அம்சம் அனைத்து நாடுகளுக்கும் தற்போது பயன்படவில்லை. செப்டம்பர் முதல் US, UK, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு மட்டும் கொண்டு வந்துள்ளது. அக்டோபர் முதல் மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்துவோம் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.எந்தந்த மொழிகளுக்கு
அக்டோபர் இறுதிக்குள் இந்தியாவிலும் பேஸ்புக்கில் பணம் சம்பாதிக்கும் அம்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் இறுதியில் ஆங்கிலத்தில் POST போடுபவர்கள் மட்டும் பணம் சம்பாதிக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. தமிழ் உட்பட மற்ற மொழிகளுக்கு இனிவரும் காலங்களில் நாங்கள் அங்கீகாரம் கொடுக்கும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.நிபந்தனைகள்
பேஸ்புக்கில் உள்ள அனைவராலும் பணம் சம்பாதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஒரு சில நிபந்தனைகள் உள்ளது அவை என்னென்ன என்பதை கீழே காண்போம்,- நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவையும் குறைந்தது ஒரு நிமிடமாவது பார்த்திருக்க வேண்டும்.
- உங்கள் Page மொத்தமாக 30 ஆயிரம் நிமிடங்கள் பார்த்திருக்க வேண்டும்.
- உங்கள் Page சில் குறைந்தது 10,000 பாலோவர்ஸ் இருக்க வேண்டும்.
முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள
மேலும் இதைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள பேஸ்புக்கின் officielle லிங்கை பயன்படுத்தவும்
Youtube போல இனி பேஸ்புக்கிலும் பணம் சம்பாதிக்கலாம்
Reviewed by
mev
on
00:21:00
Rating:
5
No comments: