இனி வங்கி போல் செயல்படும் தபால் துறை | post payment bank

கிராமப்புறங்களில் வங்கி சேவை

    கிராமப்புறங்களில் வங்கி சேவை மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால் அங்கு கூட்டமாக காணப்படும். அதை தடுக்கும் வகையில் கிராமப்புறங்களில் உள்ள தபால் துறையை வங்கி போல் செயல்பட வைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் செப்டம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. ஆகையால் தற்போது அஞ்சல் துறை ஒரு வங்கி போல செயல்படுகிறது.

இந்தியா முழுவதும்

    தற்பொழுது இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேங்க்குகள் உள்ளது. அதே சமயத்தில் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் துறைகள் உள்ளது. அந்தத் தபால் துறையை வங்கி சேவையை வழங்கும் மையமாக மாற்றப்படுவதால் குக்கிராமங்களுக்கும் வங்கி சேவை மிக எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேமிப்பு கணக்கு

    இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலம் மூன்று வகையான சேமிப்பு கணக்கு உள்ளது. ஒன்று வழக்கமான சேமிப்பு கணக்கு, இரண்டு மின்னணு சேமிப்பு கணக்கு மற்றும் அடிப்படையான சேமிப்பு கணக்கு என மூன்று விதமான சேமிப்பு கணக்கு உள்ளது. மேலும் இந்த சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு 4 சதவீதம் வட்டி வழங்கப்படும் என இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் அறிவித்துள்ளது.


இருப்பு தொகை

    இந்த இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லாமல் கூட கணக்கை துவங்கலாம் என இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் அறிவித்துள்ளது. மேலும் இந்த பேங்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை, குறைந்தபட்ச டெபாசிட், பராமரிப்பு கட்டணம் என எதுவும் கிடையாது என அறிவித்துள்ளது. மேலும் எந்த பேங்கில் 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கணக்கு துவங்க முடியும் என அறிவித்துள்ளது இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்.

No comments:

Powered by Blogger.