97 ரூபாய் combo plan
டெலிகாம் சந்தையில் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது என்பது நாம் அறிந்த ஒன்று. ஒவ்வொரு நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள தினம் தினம் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இறுதியாக ஏர்டெல் நிறுவனம் 97 ரூபாய்க்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த 97 ரூபாய் திட்டம் ஜியோ வின் தொண்ணூத்தி எட்டு ரூபாய்க்கு போட்டியாக இருந்தது.
தற்பொழுது மற்றொரு புதிய பிளான்
ஏர்டெல் நிறுவனம் ஜியோ வின் 399 ரூபாய் prepaid plan போட்டியாக ரூபாய் 419க்கு ஒரு புதிய பிளானை அறிமுகம் செய்துள்ளது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த 419 ரூபாய் பிளான் இதற்கு முன்பு ஏர்டெல் நிறுவனம் 399 ரூபாய் கொடுக்கப்பட்ட ப்ளான் ஆகும். இந்த 419 ரூபாய் பிளானில் என்ன உள்ளது என்பதே நாம் தொடர்ந்து காணலாம்.
பிளானின் பலன்கள்
ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த 419 ரூபாய் பிளானில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி 4ஜி டேட்டா வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் calls உட்பட நாளொன்றுக்கு 100 sms வழங்குகிறது. இந்த 419 ரூபாய் திட்டம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. இந்த திட்டம் அனைத்து ஏர்டெல் பயனாளர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: