இந்தியாவில் 5G அறிமுகம். எப்பொழுது? எந்தெந்த மொபைலுக்கு?

இந்தியாவில் 5G

     இந்தியாவில் தற்பொழுது 4ஜிக்கு கடும் போட்டியாக உள்ளது. ஆனால் மிக விரைவில் இந்தியாவில் 5G வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2019 முடிவதற்குள் இந்தியாவில் 5 அறிமுகமாகும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைகள் நடக்கிறது

    இந்தியாவின் 5G யை அறிமுகப்படுத்துவதற்காக பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் 510 கோடி ரூபாயில் அதற்கான வேலையை நடத்திக்கொண்டிருக்கிறது. இதற்கு ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் உதவியாக உள்ளது .இதற்கு மற்ற நிறுவனங்களும் ஒத்துழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 5ஜி 2019 இறுதிக்குள் மக்கள் கைக்கு வராது என்பதும் மாறாக இந்தப் 5ஜி வேகம் ஹாஸ்பிடல், ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட் இதுபோல மிக முக்கியமான இடங்களுக்கு மட்டும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் எந்தெந்த நிறுவனகளுக்கு 

    இந்த 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனில் அது முதலில் ஜியோமி மற்றும் vivo விற்கு தான் வரும் என தெரியவருகிறது. அதற்காக நாம் புதிய மொபைல் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இருக்கக்கூடிய 4ஜி எல்டிஇ மொபையே 5G வந்ததற்கு பிறகு 5G க்கு அப்டேட் செய்துகொள்ள முடியும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



4ஜி யே போதுமா

    நம்மில் பலபேர் கூறுகின்றனர் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த 4ஜி வேகம் போதும் என்று. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் எதிர்காலத்தில் 4G வேகம் குறையும் என்றும் நமக்கு அப்போது 5ஜி தான் தேவைப்படும் என்றும் ஒரு சில வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். 

விலை எவ்வாறு இருக்கும் 

    5G அறிமுகமான பிறகு இந்தியாவின் விலை சைனாவின் விலையை கம்பேர் செய்யும் போது 10 மடங்கு அதிகமாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி அறிமுகமானால் நீங்கள் பயன்படுத்துகிறீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்டில் தெரிய படுத்துங்கள். மேலும் உங்களுக்கு இது போல தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நமது வலைப்பதிவு பின்பற்றவும். நன்றி.

No comments:

Powered by Blogger.