அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் ஐந்து பயனுள்ள இணையதளங்கள்


 இந்தக் கட்டுரையில் நாம் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் ஐந்து பயனுள்ள இணையதளங்கள் பற்றி பார்க்கப் போகிறோம். உங்களுக்கு ஏதேனும் விருப்பம் உள்ளது எனில் அந்த இணையதளத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.


தேவையில்லாத மெயில்களை குறைக்க

    10 minute mail என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் நமக்கு வரும் தேவையில்லாத மெயில்களை குறைக்க முடியும். அதாவது நாம் ஏதாவது ஒரு இணையதளத்தை பயன்படுத்த நினைக்கும் போது, அந்த இணையதளத்தை பயன்படுத்த இமெயில் லாகின் செய்ய வேண்டும். நீங்கள் உங்களுடைய பர்சனல் இமெயில் கொடுத்தீர்கள் எனில் உங்களுக்கு அடிக்கடி ஈமெயில் அனுப்பி தொந்தரவு செய்வார்கள். அதற்கு பதில் நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தை பயன்படுத்தினீர்கள் எனில் உங்களுக்கு டெம்ப்ரவரி ஆக பத்து நிமிடத்திற்கு பயன்படக்கூடிய ஒரு ஈமெயில் கிடைக்கும். அதை வைத்து நீங்கள் புதிய இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். நிச்சயம் இந்த இணையதளம் உங்களுக்கு பயன்படும் ஆகையால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அந்த இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.

வைரஸை கண்டறிய

    Virus Total என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் உங்களுடைய file அல்லது நீங்கள் தேடக்கூடிய வெப்சைட் போன்ற அனைத்திலும் வைரஸ் உள்ளதா? இல்லையா? என இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும். அதாவது உங்களிடம் இருக்கக்கூடிய பைல்கள் இந்த இணையதளம் மூலம் ஸ்கேன் செய்தீர்கள் எனில், அந்த பைலில் வைரஸ் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்து கொள்ள முடியும். அதேபோல் நீங்கள் ஏதாவது ஒரு இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் எனில் அந்த இணைய தளத்தில் வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை மிக சுலபமாக Virus Total என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்களுடைய மொபைல் அல்லது கணினியை பாதுகாத்துக்கொள்ள முடியும். Virus Total என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும். ஆகையால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இணையதளத்தை பயன்படுத்தி பாருங்கள்.

லோகோ டிசைன் செய்ய

   DesignEvo என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் உங்களுக்கு தேவையான லோகோ வை நீங்களே உருவாக்கி கொள்ளலாம். இதற்கு உங்களுக்கு போட்டோ ஷாப் தெரிந்திருக்க தேவையில்லை.



மேலும் இந்த இணையதளத்தில் பல கேட்டகரியில் லோகோ டிசைன் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு லோகோ டிசைன் செய்ய விருப்பம் உள்ளது எனில் நிச்சயம் இந்த இணையதளம் உங்களுக்கு பிடிக்கும். ஆகையால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இணையதளத்தில் சென்று பார்க்கவும்

பிளாக் செய்யப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்த

    ProxySite என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் நமது நாட்டில் பிளாக் செய்யப்பட்டுள்ள அனைத்து இணையதளத்தையும் ProxySite என்று சொல்லக்கூடிய இந்த இணைய தளத்தின் மூலம் அந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். நிச்சயம் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து இந்த இணையதளத்தில் முயற்சி செய்து பார்க்கவும்.

மாணவர்களுக்கான இணையதளம்

    Animagraffs என்று சொல்லக்கூடிய இந்த இணையதளம் மூலம் நீங்கள் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதாவது எந்தப் பொருள் எதற்கு பயன்படுகிறது மற்றும் அந்தப் பொருள் எப்படிப் பயன்படுகிறது என முழு தகவல்களையும் இந்த இணையதளத்தில் மிகத் தெளிவாக கொடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி அது எப்படி வேலை செய்கிறது என்பதை அனிமேஷன் வடிவில் கொடுத்துள்ளனர். ஆகையால் இந்த இணையதளம் மூலம் அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆகையால் இந்த இணையதளம் நிச்சயம் உங்களுக்குப் பயன்படலாம். ஆகையால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இணையதளத்திற்கு செல்ல முடியும்.

No comments:

Powered by Blogger.