கடும் போட்டி
ஜியோ வந்ததற்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்களில் கடும் போட்டி நிலவுவது நாம் அனைவரும் அறிந்ததே. சில நிறுவனங்கள் போட்டி போட முடியாமல் வெளியேறிய சம்பவங்களும் உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட சில நிறுவனங்களே இன்னுமும் இந்திய சந்தையில் உள்ளது. ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டால் மட்டுமே இந்திய சந்தையில் இடம் பிடிக்க முடியும் என்பதை அறிந்து ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.மூன்று புதிய திட்டங்கள்
ஏர்டெல் நிறுவனம் தற்போது 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் 35 ரூபாய்க்கு ஒரு திட்டமும், 65 ரூபாய்க்கு ஒரு திட்டமும், 95 ரூபாய்க்கு மற்றொரு திட்டமும் என இந்த மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் தற்பொழுது 97 ரூபாய்க்கு ஒரு புதிய திட்டத்தை இந்திய சந்தையில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.திட்டத்தின் பலன்கள்
தற்பொழுது ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 97 ரூபாய் திட்டத்தில் நாம் 28 நாட்களுக்கு முன்னூற்று ஐம்பது நிமிடங்கள் பேசிக்கொள்ள முடியும். இதில் Roming கும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா 3ஜி மற்றும் 4ஜி க்கு கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 28 நாட்களுக்கு நம்மால் மொத்தம் 200 எஸ்எம்எஸ் அனுப்பி கொள்ள முடியும்.98 ஜியோ திட்டத்தின் பலன்கள்
ஜியோ நிறுவனம் தொண்ணூத்தி எட்டு ரூபாய்க்கு ஒரு திட்டத்தை வைத்துள்ளது. இந்தத் திட்டத்தில் unlimited calls பேசிக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி இதில் ரோமிங்கும் அடங்கும். மேலும் இந்த திட்டத்தில் 300 sms 28 நாட்களுக்கு அனுப்பி கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் கால அவகாசம் 28 நாட்களாகும். மேலும் இந்தத் திட்டத்தில் ஜியோ நிறுவனம் 28 நாட்களுக்கு 2ஜிபி 4 ஜி டேட்டா வழங்குகிறது .
ஜியோ க்கு போட்டியாக ஏர்டெல் அறிமுகப்படுத்தியது வெறும் 97 ரூபாய் பிளான்
Reviewed by
mev
on
23:59:00
Rating:
5
No comments: