Friday, April 11 2025

பட்ஜெட் விலையில் டெக்னோ கேமான் iACE2 மற்றும் iACE2X ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

பட்ஜெட்  விலையில் டெக்னோ கேமான் iACE2 மற்றும் iACE2X ஸ்மார்ட்போன் அறிமுகம்..!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆஃப்லைன் பிராண்டாக விளங்கும் டெக்னோ இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. டெக்னோ கேமான் iACE2 மற்றும் iACE2X  என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 5.5 இன்ச் 1440x720 பிக்சல் HD . பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். சிப்செட், 13 எம்.பி. பிரைமரி கேமரா, VIA  இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களை கைவிரல்கள் ஈரமாக இருக்கும் போதும், சீராக வேலை செய்யும் என தெரிகிறது. இரு ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் அன்லாக் வசதி, பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ SD. ஸ்லாட், டூயல் 4ஜி VOLTE  மற்றும் 3050 Mah  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

டெக்னோ கேமான்  iACE2 மற்றும் iACE2X  சிறப்பம்சங்கள்
- 5.5 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்
- IMG பவர் வி.ஆர். ஜி.இ. கிளாஸ் GPU
- 2 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ்.2)
- 3 ஜி.பி. ரேம் (ஐ.ஏஸ். 2 எக்ஸ்) 
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் HIOS 4.1
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
- வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
- கைரேகை சென்சார்
- ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3050 Mah . பேட்டரி
டெக்னோ கேமான் டெக்னோ கேமான்  iACE2 மற்றும் iACE2X  ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.6,699 மற்றும் ரூ.7,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இரு ஸ்மார்ட்போன்களும் மிட்நைட் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. கேமான் iACE2  ஸ்மார்ட்போன் சிட்டி புளு நிறத்திலும் கேமான்iACE2X  நெபுலா பிளாக் கிரேடியன்ட் நிறத்தில் கிடைக்கிறது.

No comments:

Powered by Blogger.