Saturday, April 19 2025

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு ஆப் செட்டிங்கில் புதிய வடிவமைப்பை கொண்டு வந்துள்ளது

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு ஆப் செட்டிங்கில் புதிய வடிவமைப்பை கொண்டு வந்துள்ளது..!
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் மேம்படுத்தப்பட்ட செட்டிங்ஸ் பகுதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் செட்டிங்ஸ் தோற்றம் மாற்றப்பட்டு பல்வேறு டூல்களுக்கு புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது. 
புதிய மாற்றங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.45 செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் செட்டிங்ஸ் மெனு மற்றும் புதிய மாற்றங்கள் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
புதிய மாற்றங்களில் முதன்மையானதாக பேமென்ட்ஸ் (Payments) ஆப்ஷன் இருக்கிறது. இது இணைக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்களை பட்டியலிடுகிறது.
அக்கவுண்ட்ஸ் (Accounts) பகுதியை திறக்கும் போது ஒவ்வொரு ஆப்ஷனிற்கும் பிரத்யேக ஐகான் வழங்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதன் செக்யூரிட்டி (Security), சேஞ்ச் நம்பர் (Change number), டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (Two-step verification) உள்ளிட்டவற்றுக்கும் புதிய ஐகான்கள் வழங்கப்பட்டுள்ளது.
, நோட்டிஃபிகேஷன்ஸ் (Notifications) பகுதியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹெல்ப் (Help) பகுதியின் அனைத்து டூல்களும் பிரத்யேக ஐகான்களும் மாற்றப்பட்டிருக்கிறது.

இத்துடன் நெட்வொர்க் யூசேஜ் பக்கத்தில் இனி மெமரி பயன்பாட்டு விவரம் மற்றும் தேதி, நேரத்துடன் காண்பிக்கிறது. பேமென்ட்ஸ் தவிர பீட்டா செயலியின் மற்ற அம்சங்கள் சீராக இயங்குகிறது.
இதேபோன்று டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ் (Data and storage usage) போன்ற ஆப்ஷன்களில் இனி டேட்டா பயன்பாடு பற்றிய விவரங்களை பார்க்க முடியும். இதற்கு நெட்வொர்க் யூசேஜ் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். புதிய இன்டர்ஃபேஸ் மெசஞ்சர் செயலியின் ஸ்டேபிள் பதிப்பில் காணப்படவில்லை.

Leave a Comment

No comments:

Powered by Blogger.