TRAI யின் விதிமுறைப்படி உங்களுக்கு பிடித்த சேனல்களை தேர்ந்தெடுக்க ஜனவரி 31 இறுதியாக இருக்கும்

TRAI யின் விதிமுறைப்படி உங்களுக்கு பிடித்த சேனல்களை தேர்ந்தெடுக்க ஜனவரி 31 இறுதியாக இருக்கும்
DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என TRAI தெரிவித்துள்ளது!
நீங்கள் உங்கள் டிவியில் உங்களுக்கு பிடித்த சேனல்களை மட்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் இதற்க்கு உங்களையும் தேவையான சேனல்களை செலக்ட் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதனுடன் உங்களிடம் வெறும் 1 மாதம் தான்  இருக்கிறது. தற்பொழுது டெலிகாம் நிறுவனம்  டெலிகாம் ரெகுலேட்டரி படி  (TRAI)  பயனர்கள்  அவர்களுக்கு பிடித்த சேனலை தேர்ந்தெடுத்து கொள்வதற்கான கடைசி நாள் ஜனவரி  31 வரை  கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு புதிய திட்டம் TRAI யிலிருந்து செயல்படுத்தப்படும். டிராய் கூறுகிறது, பிப்ரவரி 1 ல், புதிய கட்டண அமைப்பு டிவி இல் செயல்படுத்தப்பட உள்ளது.

டிராய் அமைப்பு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறைகள் வரும் 29-ம் தேதி ஜனவரிக்குள் Multi Service Operators (MSOs) மற்றும் Local Cable ஒப்பரேட்டர்ஸ் (LCOs)  முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கேபிள் மற்றம் ஒளிபரப்பு சேவைகளுக்கான புதிய விதிமுறைகளையும் இந்திய  தொலைத்தொடர்பு  விதிமுறையின் படி பிப்ரவரி 1 முதல் அமலுக்கு  வருகிறது.
இதுகுறித்து TRAI வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...
ஆனால் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தரப்பில் இருந்து "பெரும்பாலான மக்கள் இன்னமும் அனலாக் கேபிள்கள் மூலமாகத்தான் டீவி சேனல்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ட்ராயின் புதிய சட்டத்தினை அமலுக்கு கொண்டு வருவதில் நடமுறை சிக்கல்கள் உள்ளது" என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
புதிதாயக DTH சேவையினை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, DTH உபகரணங்கள் சேவைதொடக்க கட்டணம் ரூ.500 மிகாமல் வசூளிக்க வேண்டும் எனவும் TRAI குறிப்பிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாலேசன் சார்ஜ் 350-க்கு மிகாமலும், ஆக்டிவேசன் சார்ஜ் 150-க்கு மிகாமலும் வசூளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டள்ளது.
ட்ராய் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை சார்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று விசாரணையை 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர் உயர் நீதிமன்றம். எனவே வழக்கம் போல் கேபிள் டீவிகள் மற்றும் டி.டி,.எச் சேனல்கள் பிப்ரவரி 1ம் தேதி வரை பழைய பிளான்களுக்கு ஏற்றபடியே நீடிக்கும்.

No comments:

Powered by Blogger.