சாம்சங் மெம்பர்ஸ் ஆப் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது Samsung Galaxy M10

சாம்சங் மெம்பர்ஸ் ஆப் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது  Samsung Galaxy M10
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய வீடியோ மற்றும் புகைப்பட டீசர்களை வெளியிட்டுள்ளது. புதிய டீசர்களில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
 
இந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எம் (SM-M105F), கேலக்ஸி எம்20 (SM-M205F) மற்றும் கேலக்ஸி எம்30 (SM-M305F) என்ற மாடல் பெயர்களில் உருவாகி வருகிறது.
இதுதவிர சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. சாம்சங் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் மேல்புறம் இயர்பீஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ஓரங்கள் வளைந்திருக்கிறது. பக்கவாட்டில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டூயல் பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்20 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர்
- மாலி G71 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
ஸ்மார்ட்போனின்  நிறுவனம் Samsung யின் இந்த ஸ்மார்ட்போனை பிப்ரவரி 28 தேதி அறிமுக செய்ய இருக்கிறது  இதனுடன் இந்த  Galaxy M10 யின் விலை  7,990 ரூபாயாக  இருக்கிறது. 

No comments:

Powered by Blogger.