வோடபோன் வழங்கும் புதிய சலுகையில் தினமும் 1.6 ஜி.பி டேட்டா வழங்கப்படுகிறது
இந்திய டெலிகாம் சந்தையில் தற்சமயம் நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளுக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் துவங்கிய இந்த போட்டியில் ரூ.1,699 சலுகையில் ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
இருநிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் ரூ.1,699 விலையில் புதிய சலுகையை 360 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவித்தது. இத்துடன் ரூ.998 மற்றும் ரூ.597 விலையில் இரண்டு புதிய சலுகைகளை ஏர்டெல் நேற்று அறிவித்தது. இந்நிலையில், வோடபோன் தன்பங்கிற்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
இத்துடன் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் லோக்கல் , STD மற்றும் ரோமிங் கால்கள் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ். 84 நாட்களுக்கும், இலவச லைவ் டி.வி., திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பலன்களை வோடபோன் ஆப் மூலம் வழங்குகிறது.
வோடபோன் அறிவித்திருக்கும் ரூ.479 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் முழு வேலிடிட்டி காலத்தில் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 134.4 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.
வோடபோன் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஜியோவின் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
No comments: