ட்ராய் யின் அதிரடி அறிவிப்பு 100 DTH சேனல்களுக்கு மாதம் ரூ.153 கட்டணம் செலுத்த வேண்டும்
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் DTH . சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.
புதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் GST . சேர்த்து மாதம் ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.
டிராய் அறிவிப்பில் HD சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் வாடிக்கையாளர்கள் HD . சேனல்களையும் செலக்ட் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம் செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.
மேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம் அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை அவரவர் விருப்பப்படி தனியாகவோ அல்லது குழு அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். சேனல்களின் கட்டண விவரங்களை சேவை நிறுவனங்கள் 999 என்ற பிரத்யேக சேனலில் வழங்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
புதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.
No comments: